search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாய தொழிலாளர்கள் போராட்டம்"

    100 நாள் வேலை கேட்டு கோவில்பட்டியில் இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
    கோவில்பட்டி:

    பணி அட்டை வைத்துள்ள அனைவருக்கும் நிபந்தனையின்றி 100 நாள் வேலை வழங்க வேண்டும். வேலை கேட்டு மனு அளித்த 15 நாட்களுக்குள் பணி வழங்க வேண்டும். வேலை வழங்காவிட்டால் வேலையில்லா கால நிவாரணம் வழங்க வேண்டும்.

    பெண்களுக்கு தனி வேலை அளவை தீர்மானிக்க வேண்டும். கூலி ரூ.224-க்கு குறைக்காமல் வழங்க வேண்டும். 100 நாள் வேலைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வேறு பணிக்கு மாற்றக்கூடாது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடந்தது.

    கோட்டாட்சியர் அலுவலகம் முன் நடந்த போராட்டத்தில், விவசாய தொழிலாளர் சங்க தலைவர் ரவீந்திரன், மாவட்ட செயலாளர் சண்முகராஜ், விளாத்திகுளம் தாலுகா மார்க்சிஸ்ட் செயலாளர் புவிராஜ், மாதர் சங்க மாவட்ட பொருளாளர் விஜயலட்சுமி, விவசாய தொழிலாளர் சங்க பெண்கள் உப குழுவை சேர்ந்த சுந்தரி, செட்டிகுறிச்சி மாரிச்செல்வம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். #tamilnews
    தா.பேட்டையை அடுத்த ஜெம்புநாதபுரத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
    தா.பேட்டை:

    திருச்சி மாவட்டம் தா.பேட்டையை அடுத்த ஜெம்புநாதபுரத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தை சங்கத்தின் மத்திய கமிட்டி உறுப்பினர் சந்திரன் தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் பழனிசாமி, சங்க தலைவர் நல்லுசாமி, ஒன்றிய செயலாளர் காஜாமொய்தீன் ஆகியோர்  கோரிக்கைகள் குறித்து பேசினர்.

    இதையடுத்து மகாத்மா காந்தி தேசிய ஊரக 100 நாள் வேலை திட்டத்தை பழைய முறையில் செயல்படுத்த வேண்டும். அதில் பண்ணை குட்டை, கரைபோடுதல் என்று கூறி சம்பளத்தை குறைக்க கூடாது. செய்த வேலைக்கு சம்பளம் வழங்க வேண்டும். அனைத்து கிராமங்களுக்கும் போதிய அளவில் குடிநீர் வழங்க வேண்டும். பேரூர் அரசு பள்ளிக்கு ஆசிரியரை நியமனம் செய்ய வேண்டும். ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர்கள் துறையூர் - முசிறி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதில் முசிறி ஒன்றியத்தை சேர்ந்த பேரூர், குடித்தெரு, இடையப்பட்டி, முத்தையநல்லூர், சிந்தம்பட்டி, பாதக்கொட்டம், ராக்கம்பட்டி, 
    ஒத்தப்பட்டி, காத்தியான்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாய தொழிலாளர்கள் பங்கேற்றனர். அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷங்களை எழுப்பினர்.

    இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட 137 பெண்கள் உள்பட 165 பேரை கைது செய்தனர்.
    ×